மன்னார் டிராவல்ஸ்
Tuesday, May 8, 2012
Tuesday, November 22, 2011
முன்னுரை
மன்னார் மாவட்டத்தின் சிறப்புகள்
கி.பி. 1650 ஆம் ஆண்டு போர்த்துக்கேயர் படையெடுத்து வரும் வரை மன்னார் பிரதேசம் சகல வளங்களும் பொருந்தியதாகயாழ்ப்பாண இராச்சியத்தின் ஒரு பகுதியாக விளங்கியதாக வரலாறு கூறுகின்றது.
கிமு 5ம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட விஜயன் உட்பட எழுநூறு பேர் இலங்கையில் கரையொதுங்கியதாக மகாவம்சம் கூறுகிறது. விஜயனுடன் ஒதுங்கிய எழுநூறு பேரில் உபதிஸ்ஸன் என்ற பிராமணனொருவன் இருந்ததாகவும் அவன் மன்னாரில் திருக்கேதீஸ்வரத்திற்கு சென்று வழிபட்டதாக மகாவசம்சத்தில் பதியப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தின் பழம் பெருமைக்குச் சான்றாக மாதோட்டத் துறைமுகம் கொள்ளப்படுகின்றது. வரலாற்றுக் காலத்திற்கு முந்திய காலத்திலேயே இந்தியா உட்பட பிறநாட்டு வணிகர்கள் வந்து சென்ற துறைமுகமாக விளங்கிய பெருமை மாதோட்டத்திற்கு உள்ளது.
சைவாலயங்கள்:
- திருக்கேதீஸ்வரம்
- பாலம்பிட்டி முத்துமாரியம்மன் கோயில்
- தலைமன்னார் முத்துமாரியம்மன் கோயில்
- சிலாவத்துறை அம்மன் கோயில்
- சின்னக்கரிச்சல் பிள்ளையார் கோயில்
- வட்டக் கண்டல் சித்தி விநாயகர் கோயில்
- இலுப்பைக்கடவை முத்துமாரியம்பாள் கோயில்ல்
- இலுப்பைக்கடவை சித்தி விநாயகர் கோயில்
- இலுப்பைக்கடவை முனீஸ்வரர் கோயில்
- கள்ளியடி கற்பகவிநாயகர் ஆலயம்
இவற்றை விட தலை மன்னார், மன்னார், நானாட்டான், உப்புக்குளம் திருவானைக் கூடம், பாலம்பிட்டி, பேசாலை,சின்னக்கரிசல் சிறுநாவற்குளம், பறப்பாங்கண்டல், முள்ளிப்பள்ளம், எழுந்தூர், ஆலடி, கீரி, மாந்தை, உயிலங்குளம், தாராபுரம்,வண்ணாமோட்டை, சின்னப் பண்டிவிரிச்சான், பூம்புகார், முள்ளிக்குளம், பெரிய பண்டிவிரிச்சான், இரணை இலுப்பைக் குளம்,தட்சணா மருதமடு, ஆவரங்குளம், கல்மடு, முருங்கன், செம்மண்தீவு, கட்டுக்கரை, கட்டையடம்பன், விடத்தல் தீவு, ஆத்திமோட்டை, சீது விநாயகர் குளம் உட்பட பல இடங்களில இந்துக் கோயில்கள் அமைந்துள்ளன.
கிறித்துவத் தேவாலயங்கள்
- மடு மாதா தேவாலயம்
- வங்காலை புனித ஆனாள் தேவாலயம்
- பள்ளிமுனை புனித லூசியா தேவாலயம்
- மன்னார் புனித செபச்தியார் தேவாலயம்
- பேசாலை வெற்றிநாயகி ஆலயம்
- கத்தர்கோவில் பறப்பான்கண்டல்
- லூர்துமாதா கெவி மாந்தை
- புனித அந்தோனியார் தெவாலயம் தல்லாடி
- புனித அந்தோனியார் தேவாலயம் பெரியகட்டு
- புனித யூதாததெயு தேவாலயம் முகத்துவாரம்
- மன்னார் தோட்டவெளி வேதசாட்ச்சிகள் தேவாலயம்
- அடைக்கலமாதா தேவாலயம், எழுத்தூர்.
இசுலாமியப் பள்ளிவாயல்கள்
விடத்தல்தீவு முஹித்தீன் ஜும்மா மஸ்ஜித்
மன்னார் மாவட்டம்
Beauty full place
தகவல்
மன்னார் மாவட்டத்தின் அமைவிடம் 
தகவல்
மாகாணம் | வட மாகாணம் |
தலைநகரம் | மன்னார் |
மக்கள்தொகை(2001) | 151,577* |
பரப்பளவு (நீர் %) | 1279 (6%) |
மக்களடர்த்தி | 81 /சதுர.கி.மீ. |
அரசியல் பிரிவுகள் | |
மாநகரசபைகள் | 0 |
நகரசபைகள் | 0 |
பிரதேச சபைகள் | 4 |
பாராளுமன்ற தொகுதிகள் | 1 |
நிர்வாக பிரிவுகள் | |
வட்டச் செயலாளர் பிரிவுகள் | 5 |
வார்டுகள் | 0 |
ஊரூழியர் பிரிவுகள் | 153 |

Friday, November 11, 2011
Subscribe to:
Posts (Atom)